பள்ளி மாணவர்களின் கூடவே வரும் வில்லன் இவர்தான்!


         தலைவாரி, பூச்சூட்டி நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். திரும்பி கையசைக்கும் அவர்களது முதுகில் கணக்கும் புத்தகப் பையின் சுமை நம் மனதை வலிக்கச் செ
ய்யும்.
           இதற்கு ஒரு வழிபிறக்காதா என்ற கேள்வி தினந்தோறும் நமக்கு எழுகிறது. இந்த புத்தகப் பையிடம் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு குழந்தையின் மனமும் நினைக்காத நாளில்லை. பள்ளிப் படிக்கும் வயதில், எடை அதிகமான புத்தகப் பையைச் சுமப்பதால் நம்

குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 
"வீட்டுப் பாடம் எழுதுவதை என்றைக்கு கண்டு பிடிச்சாங்களோ அன்றிலிருந்து துவங்கினதுதான் இந்த அதிக எடை புத்தகப் பை பயணம், மரம், தோல், அலுமினியப் பெட்டி என பல கண்டங்கள் தாண்டி இப்போ நம் செல்லங்களின் முதுகில் அமர்ந்திருப்பது ‘எர்கோனோமிக் ஸ்கூல் பேக்’. ஸ்டைல் மாறினால் என்ன வெயிட் மாறவில்லையே. புத்தகச் சுமையைக் குறைக்க நமது முப்பருவக் கல்வி முறையில் மூன்று பருவங்களுக்கான புத்தகங்களை தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஆனாலும் அந்தந்த பருவத்துக்கு என்று புத்தகங்களும் நோட்டுகளுமாக புத்தகப் பை மூச்சுத் திணறும் அளவுக்கே உள்ளது. 
இந்திய மாணவர்கள் 15 கிலோ எடை வரை புத்தகப் பையாக சுமக்கின்றனர். தனது உடல் எடையில் 30 முதல் 35 சதவிகிதத்தை புத்தக மூட்டையாக சுமக்கின்றனர். 68 சதவீத குழந்தைகள் தங்களது எடையில் இருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமான எடையை சுமப்பதால் உடல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். 
மேலும் இவர் கூறுகையில், “இந்தியக் குழந்தைகள் பள்ளி நாட்களில் புத்தகப் பையை நீண்ட தூரம் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 12 வயது முதல் 14 வயது வரை குழந்தைகளின் உடல் வளர்சிதை மாற்றங்கள் உச்சியில் இருக்கும். இந்தக் கட்டத்தில் அளவுக்கு அதிகமாக எடை தூக்குவதால் கூன், முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற தொந்தரவுகளைச் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் மட்டும் பைகளை மாட்டிச் செயல்வதால் 29 சதவீதம் முதுகு தண்டுவட குருத்தெலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது 
முதுகுத் தண்டில் 33 சிறிய எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினாற் போல இருக்கும். இதன் இடையில் இருக்கும் குறுத்தெலும்புகள், அதன் உறுதித் தன்மையை மேம்படுத்தி உடலுக்கு கட்டமைப்பை கொடுக்கிறது. அதிகப்படியான அழுத்தம், புத்தகப் பையினால் தண்டுவடத்திலும், குறுத்தெலும்புகளிலும் சரிசெய்ய முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. பின் வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய எலும்பின் உறுதித் தன்மை சீர்குலைவு சிறு வயதில் இருந்தே ஆரம்பிக்கிறது. 
அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை கீழ் முதுகில் குழந்தைகள் தூக்கிச் செல்வது இயல்பே. புத்தகப் பையை பேலன்ஸ் செய்ய அவர்கள் முன்னோக்கி குனிகின்றனர். இதனால் கழுத்துவலி, தோள்பட்டை வலி ஏற்படுகிறது. கழுத்து இறுக்கத்தையும் மாணவர்கள் சந்திக்கின்றனர். 
நீண்ட நேரம் தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு நிற்கும் போது இரு கால்களில் சமமான எடையைப் போடாமல் ஒரு பக்கம் சாய்ந்தவாறு நிற்பதால் அனைத்து விதமான தசை வலிகளும் ஏற்படுகிறது. மேலும் அதிக வியர்வையால் தோள்பட்டை ஸ்ட்ராப் மாட்டும் இடங்களில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படலாம் புத்தகப்பையின் எடையை குறைப்பதோடு அதன் ஸ்டைலையும் மாற்ற வேண்டும் என்கிறார் செந்தில்குமார். 
- யாழ் ஶ்ரீதேவி

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank