வருமான வரி படிவம் நிரப்பும் முன் ஒருமுறை இதை படிங்க!

வருமான வரி படிவம் நிரப்பும் முன் ஒருமுறை இதை படிங்க! தனிநபர் வருமான வரி பற்றிய விரிவான விளக்கம்..
தனிநபர் வருமானம்:


வரி விதிப்பு ஆண்டு 2016-17க்கான வரி தவிர்ப்பு குறித்து திட்டமிட சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிவிலக்கு மற்றும் கழிவுகளை (Deductions) பெறலாம் என்பதை காண்போம்.



தனிநபர் வருமானத்திற்கான வரிக் கணக்கீடு அவர் 60 வயதிற்கு உட்பட்டவரா / 60 வயதிற்கு மேற்பட்டவரா (மூத்த குடிமக்கள்) அல்லது 80 வயதிற்கு மேற்பட்டவரா என்பதை பொருத்து மாறுபடும்.



அதுமட்டுமல்லாமல் 2% கல்வி வரியும் 1 % உயர் கல்வி வரியும் மற்றும் மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவர்கள் கூடுதல் கட்டணமாக (Surcharge) 12% அளவில் மொத்த வரியின் மீது கணக்கிட்டு கட்ட வேண்டும்.

குடியிருப்பு தகுதியும் வருமானவரி கணக்கீடும்:

ஒருவரின் குடியிருப்பு தகுதிக்கேற்ப வருமானவரி கணக்கீடு மாறுபடும்.

உதாரணமாக, இந்தியக் குடியிருப்பு பெற்றவர், உலகில் எங்கு சம்பாதித்தாலும் வருமான வரி கணக்கிட வேண்டும். மாறாக, குடியிருப்பு அல்லாதவர்  (என்ஆர்ஐ) இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டும் வரி கட்டினால் போதுமானதாகும்.

ஆகையால், வரி கணக்கிடும் முன் குடியிருப்பு தகுதியை நிர்ணயிப்பது அவசியம். குடியிருப்பு தகுதி (Residential status) நிர்ணயிக்கும் முறையை சுருக்கமாக காணலாம்.

நிபந்தனைகள்

1. (பிரிவு 6(1)) சம்பந்தப்பட்ட நிதியாண்டில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்க வேண்டும்.
2. சம்பந்தப்பட்ட நிதியாண்டில் 60 நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய '4' நிதியாண்டுகளில் 365 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும்.

(இந்தியாவில் இருந்து புறப்பட்ட நாளும் இந்தியாவில் வந்து இறங்கிய நாளும் கணக்கில் கொள்ள வேண்டும்).

மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றிற்கு உட்பட்டு இருந்தாலும் அவர் குடியிருப்பு பெற்றவர் ஆவார். இரண்டு நிபந்தனைகளுக்கும் உட்படாதவர் குடியிருப்பு பெறாதவராக கருதப்படுவார்.

2. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய வெளிநாடு செல்பவர்கள் அங்கு பெறும் சம்பளம் மற்றும் படிகளுக்கு (Allowanus) வரிகட்ட வேண்டுமா? வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு மேற்கண்ட முதல் நிபந்தனை மட்டுமே பொருந்தும் அதாவது 182 நாட்கள் அல்லது அதற்கு மேலாக இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் மட்டுமே வரி கட்ட வேண்டும். மேலும், பயணச்செலவு, விடுதி மற்றும் உணவு செலவுகளுக்காக பெறும் பணத்திற்கு வரிகட்ட தேவையில்லை.

வரிவிலக்கு பெற்ற படிகள் என்னென்ன?

தினப்படி (Daily Allowance) பயணப்படி (Transport Allowance) சீருடைப்படி (Uniform Allowance) போன்றவை முழு வரிவிலக்கிற்கு உட்பட்டவை ஆகும்.

பகுதியாக விலக்களிக்கப்பட்ட படிகள்:

குழந்தைகள் கல்விப்படி - மாதம் ரூ.100 இரண்டு குழந்தைகளுக்கு

குழந்தைகள் விடுதிப்படி - மாதம் ரூ.300 இரண்டு குழந்தைகளுக்கு

பயணப்படி - மாதம் ரூ.1,600 (ஊனமுற்றோருக்கு ரூ3,200 வரை)

இதுமட்டுமின்றி, வீட்டு வாடகைபடி (HRA), Perquisite எனப்படும் இதர பலன்கள், விருப்ப ஓய்வுத்தொகை, வேலை நீக்க நிவாரணத்தொகை ஆகியவையும் பகுதியாக வரிவிலக்கிற்கு உட்பட்டவையாகும்.

சம்பள வருமானத்தில் இருந்து என்னென்ன கழிவுகள் (Deduction) பெறலாம்?

வருமான வரிச் சட்டம் பிரிவு 16-ன் கீழ் (IT Act Sec 16)


1. அரசுப் பணியில் உள்ளவர்கள் கேளிக்கைபடி (Entertainment Allowance) ரூ. 5,000 வரை வரிவிலக்கு பெறலாம்.

2. தாங்கள் கட்டிய தொழில்வரி முழுவதும் உச்சவரம்பின்றி கழிவு பெறலாம்.

* வேலை நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பரிசுப் பொருள்களுக்கு வரிசெலுத்த வேண்டுமா?

ஆம் சம்பந்தபட்ட நிதியாண்டில் நீங்கள் பெறும் பரிசுப்பொருட்கள் மற்றும் பரிசு கூப்பன்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.5000 அல்லது அதற்கு மேல் இருப்பின், அது சம்பள வருமானத்துடன் சேர்த்து வரிக் கணக்கிடப்படும்.

  வீட்டுக்கடன் வட்டி கழிவு (Interest Deduction) பெற உச்ச வரம்பு (பிரிவு 24)

1. வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் மீதான கடனுக்கான வட்டியை உச்சவரம்பின்றி தங்கள் வாடகை வருமானத்தில் கழிவு பெறலாம்.

2. மாறாக, சுயமாக  குடியிருக்கும் வீட்டிற்கான வட்டியை வரம்பிற்கு உட்பட்டு கழித்துக் கொள்ளலாம். அதாவது, புதிய வீடாக இருப்பின் ரூ.2,00,000 வரையும் புணரமைக்கப்பட்ட (Renovation) வீடாக இருப்பின் ரூ.30,000 வரையும் வட்டியை கழித்துக்கொண்டு மீதமுள்ள வருமானத்திற்கு வரி கணக்கிட வேண்டும்.

* வீடு கட்டி முடிப்பதற்கு முன் கட்டப்பட்ட வட்டியை கழிக்க முடியுமா?

வீடு கட்டி முடிப்பதற்கு முன் கட்டிய வட்டியை  ஐந்து தவணைகளில் கட்டி முடித்த நிதியாண்டில் இருந்து கழிக்கலாம்.

* காலி மனையில் பெறப்படும் வாடகை வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா?

காலி மனை அல்லது நிலத்தின் மீதான வாடகை வருமானத்திற்கு இதர வருமானங்களின் கீழ் வரி கணக்கிடப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)