CBSE மற்றும் ICSE பள்ளிகளுக்கு நெருக்கடி


'சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடப் பிரிவு மாணவர்களுக்கு மொழி பாடப்புத்தகங்களை,

இனி தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பள்ளி மாணவர்களுக்கு பகுதி -௧ மொழிப் பாடம் மற்றும் பிரதான பாடங்களுக்கான புத்தகங்களை பல்வேறு தனியார் பதிப்பகங்கள், நிறுவனங்கள் அச்சிட்டு வழங்குகின்றன. பதிப்பகம் நிர்ணயித்த விலையில் தான் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் சப்ளை செய்வதில் பதிப்பகங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும். இந்நிலையில், மொழிப் பாடமான தமிழ் பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. 
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாடநுால் கழகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவையான புத்தகம் விவரம் முன்கூட்டியே 'ஆர்டர்' கொடுக்க வேண்டும். மொத்த பணமும் காசோலையாக வழங்கிய பின் தான் கொள்முதல் செய்ய முடியும். தனியார் பதிப்பகங்களுக்கு அவ்வாறு வழங்க தேவையில்லை. புத்தகங்களை முன்கூட்டி பெற்று அதற்கான கட்டணம் பின்னர் தான் அளிக்கப்படும். இதனால் தனியார் பதிப்பகங்களில் தான் இப்பள்ளிகள் இதுவரை புத்தகங்கள் கொள்முதல் செய்தன. கல்வித்துறையின் இந்த உத்தரவால் பாடநுால் கழகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank