Jio வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு வெளியீடு.


     ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.


செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். 
இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும். 
மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையலாம். 
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், ரூ.303ல் தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம் தேதி 2018ம் ஆண்டு வரை பெறலாம் என்று அறிவித்தார். 
மேலும் அவர் பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ கடந்த 6 மாதத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.  ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைவதாகவும், அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)