'NEET' தேர்வில் கட்டண பிரச்னை: CBSE புதிய அறிவிப்பு


       மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், மீண்டும் கட்டணம் செலுத்தும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


      மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், மே 7ல், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஜன., 31ல் துவங்கியது; மார்ச் 1 வரை, விண்ணப்பப் பதிவு மற்றும் கட்டணம் செலுத்த அவகாசம் தரப்பட்டுள்ளது. 


இதில், ஏற்கனவே விண்ணப்பத்தை பதிவு செய்து, கட்டணம் செலுத்திய பலருக்கு, அதற்கான ஏற்பு கடிதம், இணையதளத்தில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா என, பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: நீட் தேர்வுக்கு, மார்ச் 1க்குள் விண்ணப்பத்தை பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதற்கான உறுதி செய்யும் பக்கம், இணையதளத்தில் கிடைக்காமல் இருக்கலாம். எதிர்காலத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாமல் இருக்க, தேர்வர்கள் மீண்டும் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவர்கள், ஏற்கனவே செலுத்திய பணம், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank