அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்க உதவும் Tan Excel பயிற்சி!
கல்வி தனியார்மயமான பிறகு கற்றலில் போட்டி என்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. அந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்படவேண்டிய கட்டாயம் அரசுப் பள்ளி
களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் பெறவேண்டிய 35 மதிபெண்ணைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலே பெரிதாக எண்ணிய காலம் மலையேறிவிட்டது.
இப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்பதை விட, எத்தனை பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்? எத்தனை பேர் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றார்கள்? எத்தனை பேர் எத்தனை பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றார்கள்? என்று ஆய்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களில் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு டேன் எக்ஸெல் (Tan Excel) என்று பெயர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சனி, ஞாயிறுகளில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு பாடத்திலும் அதிகபட்ச மதிப்பெண் பெற வைப்பது, மேலும் அவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது என்கிற நோக்கத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இதற்குத் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் பயணப்படியும் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதால் சில மாணவர்கள் இதில் விருப்பத்தோடு கலந்துகொள்வதில்லை. சிலர் செல்வதே இல்லை. இதுகுறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை. பெற்றோர்களின் பொறுப்பில் மாணவர்கள் இவ்வகுப்புக்குச் செல்லவேண்டும் என்பதால் பெற்றோர்கள் தங்களின் வேலைகளைத் தம் குழந்தைகளுக்காக விட்டுவிட்டு இரு நாட்களை ஒதுக்கி இவ்வகுப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
2/1/2017 2:07:58 PMகல்வி தனியார்மயமான பிறகு கற்றலில் போட்டி என்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. அந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்படவேண்டிய கட்டாயம் அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் பெறவேண்டிய 35 மதிபெண்ணைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலே பெரிதாக எண்ணிய காலம் மலையேறிவிட்டது. இப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்பதை விட, எத்தனை பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்? எத்தனை பேர் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றார்கள்? எத்தனை பேர் எத்தனை பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றார்கள்? என்று ஆய்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்களைத் தேர்வுசெய்து டாப்பர் வகுப்பு எனச் சிறப்புப் பயிற்சி அளிப்பார்கள். அந்தத் தொடர் பயிற்சியின் காரணமாகப் பல மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் நூற்றுக்குநூறு பெறுவார்கள். அதுபோல ஒரு வாய்ப்பினை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினால் அவர்களும் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று எண்ணி ஒரு புதிய செயல்திட்டத்தை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களில் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு டேன் எக்ஸெல் (Tan Excel) என்று பெயர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சனி, ஞாயிறுகளில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு பாடத்திலும் அதிகபட்ச மதிப்பெண் பெற வைப்பது, மேலும் அவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது என்கிற நோக்கத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இதற்குத் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் பயணப்படியும் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதால் சில மாணவர்கள் இதில் விருப்பத்தோடு கலந்துகொள்வதில்லை. சிலர் செல்வதே இல்லை. இதுகுறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை. பெற்றோர்களின் பொறுப்பில் மாணவர்கள் இவ்வகுப்புக்குச் செல்லவேண்டும் என்பதால் பெற்றோர்கள் தங்களின் வேலைகளைத் தம் குழந்தைகளுக்காக விட்டுவிட்டு இரு நாட்களை ஒதுக்கி இவ்வகுப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வகுப்பு நடைபெறும் இடமும் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் விவரமும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். இத்தகவலை அப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய மாணவர்களிடம் தெரிவித்து கலந்து கொள்ளச் செய்யவேண்டும். இது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. இதனை முழுமையாக மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டால் எந்தப் போட்டித் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ளலாம். மதிப்பெண்களையும் சற்றுக் கூடுதலாகப் பெறலாம்.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திடவேண்டும். இதனை உரிய அலுவலர்கள் மேற்பார்வை செய்து இத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து மேலும் சிறப்பாகச் செயல்படுத்தினால் வாய்ப்புகளற்ற ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள். விடுமுறை நாட்களில் வகுப்பு எடுக்கவேண்டியிருப்பதால் ஆசிரியர்கள் கூடுதல் சுமையாகக் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
Tan Excel திட்டத்தில் பயிலும் ஒரு மாணவர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றால் அந்தப் பாடத்தை நடத்திய ஆசிரியருக்கும் மாணவருக்கும் சிறப்புப் பரிசுகள் அளித்து ஊக்கப்படுத்தலாம். எந்த மையத்தில் அதிகபட்ச மாணவர்கள் அதிக விழுக்காடு மதிப்பெண் பெறுகின்றனரோ அந்த மையத்தில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசளிக்கலாம். களத்தில் நேரடியாகப் பங்கேற்கும் ஆசிரியர் மாணவர்களிடையே உரிய அலுவலர்கள் கலந்துரையாடி இன்னும் வெற்றிகரமாக இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்தினால் முழுவெற்றி நிச்சயம்.