TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்? விரிவான பதில் பதிவு :


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )
அரசு பணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்
TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாட திட்டம் யாது?
பாட திட்டம் :
தாள் 1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள் 2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூக அறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுய குறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட் மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது
வாழ்த்துகளுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர், பூங்குளம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank