TETபற்றிய சில கேள்விகள் ??

TETபற்றிய சில கேள்விகள் ??
 1. எந்த பாட திட்டத்தின் படி தேர்வு நடக்கும்
2. பழைய பாட திட்டத்தின் படியா ?


3. வெயிடேஜ் மதிப்பெண் உண்டா ?
4. ஏற்கனவே தேர்வு பெற்றவர்களுக்கான பதில் என்ன ?
5. இனி வரும் தேர்வு எழுதுபவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு என்ன ?
6.ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இனி தேர்வு பெறுபவர்களுக்கும் எந்த அடிப்படையில் முன்னுரிமை பெறுவார்கள்?
10.பல்வேறு பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களின் வெயிடேஜ் விலக்கு கோரிக்கை பற்றிய பதில் ஏதாவது உண்டா ?
11. இப்போதைய தேர்வு முறையின் பெருங் குறைபாடான கணக்கு வினாக்களுக்கு விடை அளிக்காமலே கணக்கு ஆசிரியராகவும் ஆங்கிலத்தில் விடையளிக்காமலே ஆங்கில ஆசிரியராகவும் தன் பாடத்தை விட மற்றபாடத்தில் அதிக மதிப்பெண்ணுக்கு படிக்க வேண்டி வரும் அவலம் பற்றிய வினாவுக்கு விடை உண்டா ?
12. பொதுத் தேர்வு நடக்கும் காலத்தில் வயிற்று பாட்டுக்காக தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றும் ஏழை போட்டியாளர்களுக்கான படிப்புகால அவகாசம் ஏதும் இல்லையே ?
13. அவர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்களே !
14.மே 15 க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே இதன் பாதிப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லையே ?
15.தற்போது bed படிக்கும் மாணவர்கள் அந்த காலத்தில் தானே தேர்வு எழுதுகிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு குறைகிறதே ?
16.விண்ணப்பிக்க 10 நாட்களாவது தேவை கடந்த தேர்வுகளில் போலீஸ் தடியடிகூட நடந்ததே ?
17. எந்த அடிப்படையில் தேர்வு நடக்கும் என்ற வினாவிற்கு விடைகிடைக்காமலே விண்ணப்பங்கள் எப்படி இச்சடிக்கப்பட்டன?
18.பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருக்கும் சீனியாரிட்டிக்கு ஏதேனும் வெயிட்டேஜ் வழங்கப்படுமா ?
19.இதன் மூலம் இப்போதைக்கு வேலைவாய்ப்புக்கு உறுதி உண்டா இல்லை வெறுமனே தேர்ச்சி பெற நடத்தும் தகுதி தேர்வுதானா ?
20. 5ஆண்டுகளுக்குள் ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் கட்டாயம் TETதேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி இப்போது எந்த நிலையில் உள்ளது ?
இப்படி எந்த கேள்விக்கும் விடையே இல்லை...
-பூவிதழ் உமேஷ்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)