TET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள்

TET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள்
தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள் :
* தேர்வர்கள் பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்.


* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15 மணி நேரம் படிப்பது பயனளிக்கும்.
* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை  1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்.
* முழு புத்தக வாசிப்பு அவசியம்.
*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.
*தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடப்பகுதியை வரி விடாமல் வாசிப்பதன் மூலம் 28, 28, 55  மதிப்பெண் வரை பெறலாம்
* அறிவியல் பகுதி அதிக பாட திட்டம் கொண்டது. குறிப்பெடுத்து திருப்புதல் செய்தல் பயனளிக்கும்
*சமூக அறிவியல் நிகழ்வுகளை பட்டியலிட்டு படிக்கலாம்
* உளவியல் குறைவான பாட அளவுடையது. ஆனால் மிக ஆழமாக உட்கூர்ந்து படித்தல் அவசியம்
*கணிதம் புரிதல் இன்றி படிப்பது பலனளிக்காது. நடைமுறை கணக்குகள் அதிகளவில் பயிற்சி எடுத்தல் சிறந்தது
*ஆங்கிலம் மொழி ஆளுமை அடிப்படையில் கேட்கபடும் வினாக்கள் அமையும்.
*வகுப்பு 6, 7 படிப்பதற்கு எளிமையானவை இவற்றை படிக்க கால அளவு குறைவாக பயன்படுத்தவும்
*9, 10 வகுப்பு பாட பகுதிகள் அதிகமான கடின தன்மை உடையது. இவற்றை ஆழ்ந்து படிக்கவும். கால அளவு அதிகம் தரவும்
* தமிழ், அறிவியல், ச.அறிவியல் படிப்பதை முதலில் துவங்குங்கள். இவை சுவாரஸ்யம் மிக்கவை. எனவே சலிப்பு வராது
* நேர மேலாண்மை அவசியம். கால அளவு குறைவு என்பதால் விரைவாக மற்றும் ஆழ்ந்து படிக்கவும்
* எதிர்வினை எண்ணங்களை தவிருங்கள். இங்கு எல்லோரும் திறமை மிக்கவரே
* தண்ணீர் இயன்ற வரை குடிக்கவும். சோர்வை போக்கும்
* கவன சிதறல் தரும் இடங்களை தவிர்த்து அமைதி நிறைந்த இடத்தில் படிக்க பழகவும்
* வெற்றி வாய்ப்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். எண்ணமே செயலாகிறது
By ,
K.PRATHEEP, BT ASST
GHSS-POONGULAM
VELLORE DT

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank