TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:
TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை:
1.பொது தமிழ் (100 வினாக்கள்)
6 அம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள தமிழ் சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
தமிழ் இலக்கியம் தொடர்பான வினாக்களுக்கு தேவிரா இலக்கிய வரலாறு புத்தகம்
( தினமும் பொது தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்)
2.கணிதம் ( 25 வினாக்கள் )
6 அம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள கணிதம் சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்.
YESHUVA PUBLISHERS- கணித புத்தகம் தொகுதி I மற்றும் தொகுதி II
(தினமும் கணிதம் தொடர்பான வினாக்கள் பயிற்சி அவசியம்)
3.நடப்பு நிகழ்வுகள் : ( 10 முதல் 15 வினாக்கள்)
தினசரி செய்தித்தாள்கள் குறிப்பாக தி ஹிந்து தமிழ் நாளிதழ் மற்றும் தினமணி நாளிதழ்
அன்றாடம் செய்திகள் குறிப்பு எடுத்து வைத்து கொண்டு படிக்கவும்.
எக்ஸாம் மாஸ்டர்(Exam Master) எனும் போட்டி தேர்விற்கான மாத இதழ்.
DoozyStudyஎனும் இணைய தளத்தின் பதிவுகள்.
மனோரமா இயர் புக் 2017
அறிவியல் :
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள் மற்றும் 12 ம் வகுப்பு விலங்கியல் புத்தகம் இவைகளை கண்டிப்பாக படிக்கவும்.
நேரமிருந்தால் 11 ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு அறிவியல் புத்தகங்கள்.
5.இந்தியா வரலாறு:
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
11 ம் வகுப்பு வரலாறு புத்தகம் இவைகளை கண்டிப்பாக படிக்கவும்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு:
10 ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் மற்றும் 12 ம் வகுப்பு வரலாறு புத்தகம்
இந்தியா அரசியலமைப்பு :
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்.
இந்திய பொருளாதாரம் :
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
11 ம் வகுப்பு இந்திய பொருளாதாரம் புத்தகம்.
12 ம வகுப்பு பொருளாதார கோட்பாடு புத்தகம் ( பணக் கொள்கை மற்றும் நிதியியல் கொள்கை பாட பகுதி போதுமானது )
TNPSC GROUP 2A -தேர்ச்சி பெற அணுகுமுறை :
1.ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் ஆழ்ந்து தெளிவாக படித்தால் போதுமானது.
2. சமூக வலைத்தளமான facebook, whatsapp - அதிக நேரம் செலவிடுதலை தவிர்க்கவும்
3.முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC Grp 1,2,2A,Grp 4 மற்றும் VAO தேர்வு தாள்களின் வினாக்களை படிக்கவும்.
4. TNPSC Group 2A (Syllabus)பாடத்திட்டத்தின் படி படித்தல் அவசியம்