TNTET 2017 அறிவிக்க காலதாமதம் ஆகுமா?
TNTET 2017 அறிவிக்க காலதாமதம் ஆகுமா?
கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டி
ய நிலை உள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்குகளால் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தது. உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த நிலையில் தேர்வு அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் தேர்வர்களிடையே அதிகமாகியது.
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழக கல்வி அமைச்சர் அவர்களும் நாள்தோறும் ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு விரைவில் வரும் என்று பேட்டி அளித்து வந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையால் ஆசிரியர் தகுதி தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா என்று தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தேர்வை நடத்துவது ஆசிரியர் தேர்வு வாரியமாக இருந்தாலும் அதற்கான உத்தரவை அரசு அளிக்க வேண்டும். இத்தகைய உத்தரவை தற்போதைய நிலையில் அரசிடம் எதிர் பார்ப்பது இயலாத காரியம். எனவே தேர்வு அறிவிப்பு சற்று காலதாமதம் ஆகலாம். அறிவிப்பு கால தாமதம் ஆனாலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்க வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே எந்த சூழ் நிலையிலும் படிப்பதை நிறுத்தாமல் தொடருங்கள். அதிகபடியாக கிடைக்கும் ஒவ்வொரு நாளையும் படிப்பதற்கு பயன்படுத்துங்கள்.
என்றும் உங்கள்
அல்லா பக்ஷ்