ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம் பட்டியல் 10-ந் தேதி வெளியீடு

TRB - TET : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் 10-ந் தேதி வெளியீடு.

2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டுநிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. 
விரிவான விவரங்கள்...
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012,2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில்

(i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள்
(ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள்
(iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்
(vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.

எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது.

தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)