பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி


        பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 


           தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. தேர்வு அறையில் வினாத்தாள்களை மாணவர்களுக்கு கொடுத்தவுடன் விடை எழுத தொடங்கினர்.
இதில் எளிமையான கேள்விகளை மாணவர்கள் முதலில் எழுத தொடங்கினர். கேட்கப்பட்ட கேள்விகளில் வினாத்தாளில் 8வது பக்கம் (B) read the following sets lines and answer the questions given below என்ற பிரிவில் கேள்வி எண் 61, 62, 63 என்ற ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.


வழக்கமாக இந்த கேள்விகளுக்கு விடை எழுத போயம் லைன் கொடுத்துவிட்டு, அதற்கான பதிலை எழுத சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான வினாத்தாளில் 61வது கேள்விக்கு மட்டுமே போயம் லைன் கொடுத்துள்ளனர். 62வது கேள்விக்கு தரவில்லை. இதனால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் குழப்பமடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியரிடம் கேட்டபோது, `61வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. 62வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கவில்லை. இதையடுத்து 63வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. இந்த போயம் லைன் 62வது கேள்விக்கா அல்லது 63வது கேள்விக்கா என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

வழக்கமாக இந்த இலக்கியத்திற்கான கேள்விகள் எளிமையாக இருக்கும். இதற்கு மாணவர்கள் விடை எழுதி முழுமையாக 3 மதிப்பெண்களை பெற்றுவிடுவர். இந்த ஆண்டு இந்த கேள்விகளில் குளறுபடி உள்ளது. இதற்கு தேர்வுத்துறை மதிப்பெண் அளிக்குமா என்று தெரியவில்லை'' என்றார். 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)