ஜியோ ப்ரைம் - ஏர்டெல் 349 - வோடோஃபோன் 345 - எந்த பிளான் பெஸ்ட்?


ஜியோ ப்ரைம் - ஏர்டெல் 349 - வோடோஃபோன் 345 - எந்த பிளான் பெஸ்ட்?


சேவைகள்ஜியோஎர்டெல்வோடோஃபோன்
  4ஜி டேட்டா1ஜிபி /நாள்1ஜிபி /நாள்1 ஜிபி /நாள்
 வேலிடிட்டி28 நாட்கள்28 நாட்கள்28 நாட்கள்
 வாய்ஸ் கால்/ குறுந்தகவல்இலவசம்300 நிமி/நாள்300 நிமி /நாள்
ரோமிங்இலவசம்இல்லைஇல்லை


ஆடிப்போய் இருக்கிறது இந்திய தொலைதொடர்பு துறை. ஜியோவின் கடந்த சில மாதங்களுக்கான இலவச சேவை, டெலிகாம் துறையையே

அதிரடித்திருக்கிறது. கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மொபைலில் கிரிக்கெட் மேட்ச்சை லைவாக பார்த்தபடியே ஓட்டுகிறார்கள். பேருந்தில் செல்லும் சீரியல் விரும்பிகள், பயணத்திலே சீரியல் பார்க்கிறார்கள். எல்லோரும் 4ஜி வேகத்தில் இணையத்தை துழாவி எடுக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டார்கள். காரணம், ஜியோ.

இந்த மாதத்துடன் ஜியோ சொன்ன கெடு முடிகிறது. முதலில் 2016 திசம்பர் வரை இலவசம் என்றார்கள் அடுத்து, மார்ச் வரை நீடித்திருக்கிறார்கள். இப்போது ஜியோ பிரைம் திட்டம் என்கிறார்கள். அதன்படி மார்ச் 31க்குள் 99ரூபாய் கட்டினால் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிடலாம். அதன்பின் மாதம் 303 ரூபாய் கட்டினால் போதும். அளவற்ற வாய்ஸ் கால், தினம் 1ஜிபி 4ஜி நெட் 28 நாட்களுக்கு நிச்சயம். அதாவது, இப்போது இலவசமாக கிடைக்கும் சேவைகள் ஏப்ரல் 1க்கு பிறகு மாதம் 303 ரூபாய். இதுதான் ஜியோவின் நீண்டகால பிளான் என்பதால், மற்ற நிறுவனங்கள் இதை சமாளித்தாக வேண்டியிருக்கிறது.
முக்கிய எதிர்கட்சிகளான ஏர்டெல்லும், வோடோஃபோனும்ஜியோவின் தாக்குதலால் ஏற்கெனவே நிலைகுலைந்துபோயிருக்கின்றன. இனியும் விட்டால் ரெகுலர் கஸ்டமர்களும் மனம்மாறுவர்கள் என புது பிளான்களை அறிவித்திருக்கின்றன. அவை என்னஎன்ன?


ஏர்டெல் 349:

ஜியோவின் 303 திட்டத்துக்கு சரியான பதிலடி ஏர்டெல்லின் 349. இந்தபிளானும் 28 நாட்களுக்கானதுதான். தினமும் 1 ஜிபி 4ஜி நெட்.ஆனால், ஏர்டெல் இங்கு சின்ன செக் வைக்கிறது. 1ஜிபியில் 500எம்பியை அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் பயன்படுத்தவேண்டும். மற்ற 500 எம்.பியை எப்போது வேண்டுமென்றாலும்பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் ஏமாற்று வித்தைதான்என்றாலும், ஏர்டெல்லின் இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர் மத்தியில்நல்ல வரவேற்பு இருக்கும். இதில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம்கிடையாது. ஆனால், ரோமிங்கில் கட்டணம் உண்டு. தினமும் 1ஜிபிலிமிட் என்பது போல வாய்ஸ் கால்களுகும் தினமும் 300 நிமிடங்கள்,வாரம் 1200 நிமிடங்கள் லிமிட் வைத்திருக்கிறார்கள். அதைத்தாண்டினால் கட்டணம் உண்டு. ஜியோ அளவுக்கு இறங்கிஅடிக்கவில்லை என்றாலும், ஏர்டெல்லின் தற்போதைய கட்டணத்துக்குஇந்த ஆஃபர் உண்மையிலே ஜாக்பாட் தான்.

இந்த ஆபரையும் இப்போதுவரை ஏர்டெல் செக்மெண்ட்டெட் ஆபர்என்றுதான் வைத்திருக்கிறார்கள். அதாவது எல்லாவாடிக்கையாளருக்கும் இது கிடைக்காது. குறிப்பிட்ட சிலருக்குமட்டுமே இது செல்லும். ஆனால், விரைவில் அனைவருக்கும் இந்தஆஃபர் கிடைத்துவிடும் என நம்பலாம்.

வோடோஃபோன் 346:

கிட்டத்தட்ட ஏர்டெல்லின் அதே கட்டணம் அதே சலுகைகள். ஆனால்,வோடோஃபோன் ஏர்டெல்லை சின்ன மார்ஜினில் வெல்கிறது. வாய்ஸ்கால்களில் மாற்றம் இல்லை. தினம் 300 நிமிடங்கள் /வாரம் 1200நிமிடங்கள் இலவசம் தான். டேட்டாவும் தினம் 1ஜிபி என 28நாட்களுக்கு 28 ஜிபி தான். ஆனால், அந்த ஒரு ஜிபியைபயன்படுத்துவதில் ஏர்டெல் போல வோடோஃபோன் எந்த செக்கும்வைக்கவில்லை. நாள்முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச்15க்குள் இந்த பிளானுக்குள் வருபவர்களுக்கு கூடுதலாக 28ஜிபியைதந்தது வோடோஃபோன்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)