ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம்.. வங்கிகள் அதிரடி அறிவிப்பு


           ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்க ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் முடிவு செய்துள்ளன.


        இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் இலவசம் என்றும், அதில் பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது என இரண்டும் அடங்கும் என்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் தொகையைப் பொருத்துக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் ஐசிஐசிஐ வங்கியும் ஐந்தாவது பணப் பரிவர்த்தனையில் இருந்து 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பு எதையும் அந்த வங்கி குறிப்பிடவில்லை. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் 
அமலுக்கு வந்துவிட்டதாக ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அறிவித்துள்ளன.
இந்த 2 வங்கிகளும் ஏற்கனவே 5 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.100 கட்டணம் வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)