திருமணமான பெண்கள் படிக்க முடியாது!!


குடும்ப சூழ்நிலை,பொருளாதார சிக்கல் போன்ற காரணங்களால் ஒரு சில பெண்கள் திருமணத்துக்கு பிறகு படிக்கின்றனர்.


இந்நிலையில்,தெலங்கானாவில் சமூகநலத் துறை சார்பாக பெண்கள் இலவசமாகத் தங்கி படிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் திருமணமாகாத பெண்கள் மட்டுமே படிக்க முடியும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.


இந்தக் கல்லூரிகளில் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் படிப்பதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அந்த கல்லூரிகளில் திருமண ஆன பெண்கள் படிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில்,சமூக நலத்துறை சார்பாக 23 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் சுமார் 280 மாணவிகள் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

இதில், எஸ்.சி பிரிவினருக்கு 75 சதவிகிதமும், எஸ்.டி மற்றும் பி.சி பிரிவினருக்கு 25 சதவிகிதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தெலங்கானா சமூகநலத் துறை கல்லூரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018 கல்வியாண்டில் இலவசமாக தங்கி படிக்கும் கல்லூரிகள் பி.எ.,பி.காம்.,பி.எஸ்.சி போன்ற இளங்கலை படிப்புகளுக்கு திருமணமாகாத பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கல்லூரி மேலாளர் பி வெங்கட் ராஜு கூறுகையில், திருமண ஆன பெண்களின் கணவர்கள் மனைவியை பார்ப்பதற்காக விடுதிகளுக்கு வருகின்றனர். அவர்களை பார்க்கும்போது,திருமணமாகாத பெண்களின் மனநிலை திசை திருப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மாணவிகள் மத்தியில் எந்தவித கவனசிதறலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக செயலாளர், ஆர் .எஸ் .பிரவீண் குமார் கூறுகையில், குழந்தை திருமணங்களை தடுப்பதற்காகதான் பெண்கள் தங்கி படிக்கும் கல்லூரிகள் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது. ஆனால், தற்போது தெலங்கானா அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவு வருத்தமளிக்கிறது. அதற்காக,நாங்கள் திருமணமான பெண்களை ஊக்குவிக்கவில்லை.இருப்பினும் யாரையும் புறகணிக்கவும்,கஷ்டப்படுத்தவும் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கமாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் கிராம மற்றும் நகர புறங்களில் குழந்தை திருமணம் பெருத்துள்ள நிலையில், எப்படி அரசாங்கம் திருமணமான பெண்களுக்கு கல்வி அளிக்க முடியாது என அறிவிக்கலாம்? என பெண்கள் முற்போக்கு அமைப்பின் சந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா அரசு அறிவித்துள்ள இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பெண் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022