ஆதார் எண் இல்லையா ? பரவாயில்லை....பிஎப் பணத்தை ஈஸியா வாங்கிக்கோங்க.....
மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் சம்பளத்தாரர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்வது வழக்கம்.அதே வேளையில் அவ்வாறு பிடிக்கப்படும் பி எப் பணத்தை எடுப்பதற்கு பல சான்றுகள் தேவைப்படுகிறது.
குறிப்பாக, ஒரு சிம் வாங்க வேண்டுமென்றாலும், ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்நிலையில் பிஎப் கணக்கில் உள்ள இருக்கும் ஓய்வூதிய தொகை முழுவதையும் ஆதார் எண் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும் என பிஎப் அமைப்பில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
படிவம் 10சி
அதாவது, 10 ஆண்டுகளுக்குள் பணி அனுபவம் இருப்பவர்கள், படிவம் 10சி-யை பூர்த்தி செய்து, பிஎப் கணக்கில் இருக்கும் ஓய்வூதியத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
படிவம் 10டி
அதே சமயத்தில், ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்யும் படிவம் 10டி-யை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதற்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் பிஎப் அமைப்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மார்ச் 31 எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.