'தினமலர்' வழிகாட்டி: நாளை மறுநாள் துவக்கம் : உயர்கல்வி சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு.
பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வி குறித்த சந்தேகங்களை, ஒரே இடத்தில் தீர்த்து கொள்ளும் வாய்ப்பு களை கொண்ட, 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, நாளை மறுநாள் சென்னையில் துவங்குகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வியின் வாய்ப்பு
கள் குறித்து வழிகாட்டும், தினமலர் வழிகாட்டிநிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, தினமலர் வழிகாட்டிநிகழ்ச்சி, ஏப்., 1, 2 மற்றும் 3ம் தேதிகளில், ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. 'தினமலர்' நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையும் இணைந்து, இந்த ஆண்டின், 'வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்து கின்றன.
பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் சேர, 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரையிலான சந்தேகங்களுக்கு, வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம் பெறலாம். இதில், 30க்கும் மேற்பட்ட நிபுணர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்று, உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து, தெளிவாக ஆலோசனைவழங்க உள்ளனர். முன்னணி பல்கலைகள், கல்லுாரிகள் சார்பில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகள், நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அமைய உள்ளன. கல்லுாரி களில் உள்ள படிப்புகள், சேர்வதற்கான தகுதி, படிப்புக்கான செலவுகள் ஆகியவை குறித்து, கல்லுாரி பிரதிநிதிகளிடம், பெற்றோரும், மாணவர்களும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்விக் கடன் பெறும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.காலை, 10:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை நடக்கும், மூன்று நாள் நிகழ்ச்சியில், பிரபல கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் பங்கேற்கும் வழிகாட்டி கருத்தரங்கம், பேனல் டிஸ்கஷன் என்ற குழு ஆலோசனை போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அறிவியல், கலை, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள், பேனல் டிஸ்கஷனில் விளக்கம் அளிக்க உள்ளனர். சிறந்த கேள்விகளை கேட்கும் மாணவர்கள், 'டேப்லெட்' மற்றும் 'வாட்ச்' போன்ற பரிசுகளை வெல்ல வாய்ப்புள்ளது. 'தினமலர்' நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையும் இணைந்து நடத்தும், இந்நிகழ்ச்சியை, கலசலிங்கம் பல்கலை மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.
'நீட்' வழிகாட்டி
கல்லுாரிகள், பல்கலைகள் குறித்த தகவல்கள், எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியில் உள்ளது, வேலைவாய்ப்புகள் போன்றவற்றை விளக்கும், தகவல் பெட்டகமான, தினமலர் வழிகாட்டி புத்தகம், நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படும்மே, 7ல் நடக்கவுள்ள, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவது எப்படி; மருத்துவ படிப்பில் சேர, தயாராவது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதலும், வழிகாட்டி நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.