நூதன மோசடியில் ஆன்லைன் பலே கில்லாடிகள்
"1 ரூபாய்க்கு விற்கப்படும் வங்கிக்கணக்கு விவரம்.. நூதன மோசடியில் ஆன்லைன் பலே கில்லாடிகள்..
ஆன் லைன் வர்த்தக்கத்தில் , பொருட்களை வாங்காதவர்கள் யாரும் இல்லை என்ற அளவுக்கு தற்போது நிலைமை மாறி கொண்டு வருகிறது . இருந்த இடத்திலேயே அமர்ந்தபடி, நமக்கு பிடித்த எந்த பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும் .
இவ்வாறு ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது நம்முடைய பெயர் முதல்கொண்டு , வங்கி கணக்கு விவரம் அனைத்தையும் பதிவிடுகிறோம் . அவ்வாறு பதிவிட்டுபொருட்களை வாங்கும் போது தெரிந்தோ தெரியாமலோ , லாக் அவுட் செய்ய மறந்திருப்போம். அல்லது நம்முடைய மொபைல் எண் பதிவாகி இருக்கும் .
நாம் எதை ஆன்லைனில் தேடி பார்க்கிறோமோ அதுதான் நம்முடைய ஆர்வம் என தெரிந்துக்கொள்ளும் டேட்டா புரோக்கர்கள், அது குறித்த அனைத்து தகவலையும் நம் மொபைல் எண்ணிற்கு தொடர்ந்து வர தொடங்கும் .
இதற்கு ஒரு வேளை, நாம் ரெஸ்பான்ஸ் செய்தாலே போதும், நம்முடைய மொபைல் எண்களில் , திருட்டு கும்பலுக்கு விலை பேசி விற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அதன்படி , 1 லட்சம் பேரின், முகவரி மற்றும் மொபைல் எண்ணை வெறும் ரூ.10,000 முதல் ரூ.15,000க்கும், இதே போன்று, வங்கி கிரெடிட் கார்டு தகவல்களை சேகரித்திருந்த ஒரு புரோக்கர், அவற்றில் 3,000 பேரின் விவரங்களை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார் என்றால் பாருங்களேன் அந்த அளவுக்கு குற்றம் நடைபெறுகிறது என்று . எனவே , ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது , கவனமாக கையாள்வது நல்லது