இமாச்சலின் இரண்டாவது தலைநகராகிறது தர்மசாலா


ஷிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக தர்மசாலாவை அறிவிக்க . அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில், காங்.
கட்சியைச் சேர்ந்த வீர்பத்ர சிங் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. முக்கிய சுற்றுலா ஸ்தலமான இம்மாநிலத்தின் தலைநகராக ஷிம்லா உள்ளது. . பனி பொழியும் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளும், ஆன்மீக ஸ்தலங்களும் நிறைந்துள்ளன. தற்போதைய தலைநகர் ஷிம்லாவில் அதிக பனிப்பொழிவு நிகழ்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில்பாதிப்பும் மற்றும் அரசு நிர்வாகத்தை நடத்துவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இம்மாநிலத்தின் மற்றொரு முக்கிய நகரமான தர்மசாலா நகரை இரண்டாவது தலைநகராக அங்கீகரிப்பது குறித்து அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட. உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank