விபத்தை குறைக்கும் வழிமுறை தனி மொபைல் 'ஆப்' அறிமுகம்


விபத்துகளை குறைக்கும் முயற்சியாக, சாலை விதிகள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்த, போக்குவரத்து துறைக்கென பிரத்யேக மொபைல், 'ஆப்' அறிமுகமாகியுள்ளது.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின், 2015ம் ஆண்டு கணக்கின்படி, ஓராண்டில், சாலை விபத்தில், 1.49
லட்சம் பேர் பலியாகின்றனர்.ஒரு மணி நேரத்துக்கு, 17 பேர் விபத்தில் மரணமடைகின்றனர்.


இவர்களில், 10.5 சதவீதம் பேர், 18 வயது நிரம்பாத இளைஞர்கள், குழந்தைகள்.நாட்டில், அதிகமான சாலை விபத்து மரணங்கள், உத்தர பிரதேச மாநிலத்தில், 12.4 சதவீதமும், அடுத்ததாக, தமிழத்தில், 10.5 சதவீதமும் ஏற்படுகின்றன.சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், பிரத்யேக மொபைல் போன், 'ஆப்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.'ஸ்மார்ட் போனில்' உள்ள கூகுள் பிளே ஸ்டோர் சென்று, 'டிரைவிங் லைசென்ஸ் இன்போ' என டைப் செய்து, இதை பதிவிறக்கம் செய்யலாம். இதில், உரிமம் குறித்த தகவல், ஆர்.டி.ஓ., கோடு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், டிரைவிங் லைசென்ஸ் எண்களை பதிவிட்டால், அது பெறப்பட்ட இடம், நாள், காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்து துறை விபரங்களும், மாநிலம் வாரியாக, இதில் இடம் பெற்றுள்ளன. ஒருவழி, இரு வழிப்பாதையில் பயணிப்பது; வழுக்கும் சாலைகள், வளைவுகளில் பயணிப்பது; கொண்டை ஊசி வளைவு, மலைப்பாதையில் வாகனங்களை இயக்குவது, பார்க்கிங் உட்பட, 200 வகையான விதிமுறைகள், இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank