கணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்
பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கணக்கு பதிவியல் தேர்வு நடந்தது. இந்த வி
னாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சில கிராமப்புற மாணவர்களுக்கு, நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண்களுக்கான, 50வது வினாவுக்கான விடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இயக்க லாபம் மற்றும் இயக்க லாப விகிதம் என, இரண்டு தனித்தனி சூத்திரங்கள் உள்ளன.
அவற்றில், எதை பயன்படுத்துவது என, சில மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, சென்னை, சவுகார்பேட்டை ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் பழனி கூறுகையில், ''வினாத்தாளில், எந்த தவறும் இல்லை. மாணவர்கள், சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். ''இந்த கேள்விக்கு, ஒரு, 'பார்முலா'வை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில், போனஸ் மதிப்பெண் கேட்கும் அளவுக்கு சர்ச்சை இல்லை,'' என்றார்.