கோடையில் கொளுத்தப் போகுது வெயில்
இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சராசரி அளவை விட கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரை நா
ட்டின் பல மாநிலங்கள் அதிக வெப்பத்தால் கடுமையான பாதிப்பை சந்திக்கும் எனவும் வானிலைய மையம்
தெரிவித்துள்ளது.கோடை வெயில் குறித்து இந்திய வானிலை வெளியிட்டுள்ள அறிக்கை : இந்த ஆண்டு கோடையில் வடமேற்கு பகுதிகள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படும். இப்பகுதிகளில் வெப்பம் ஒரு டிகிரி செல்சியசை விட அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் வெப்பம் அதிகரிக்க துவங்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே வெயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 1901 ம் ஆண்டிற்கு பிறகு 8 வது முறையாக இந்த ஆண்டு ஜனவரியில் வெயிலின் தாக்கம் உயர்ந்துள்ளது.
ஜனவரி அதிகபட்சமாக 0.67 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.கோடையில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், அரியானா, டில்லி, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் உச்சபட்ச வெப்பம் காணப்படும். அனல் காற்றின் வேகமும் அதிகமாக காணப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.