பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு


பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைநிறுவனமான, பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 8) வெளியிடப்படுகின்றன.

இந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி மையங்களில் பயின்று டிசம்பர் 2016-இல் எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலை. துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)