இருசக்கர வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு.* -உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.

நாட்டின் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை, ஆய்வு செய்து விதிமுறைகளை வகுத்து வருகின்ற
ன.



இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் பி.எஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி, முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எஸ்.4 ரக இன்ஜின்கள் பொருத்திய வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது.

இதனால் சுமார், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட  பி.எஸ்.3 இரு சக்கர வாகனங்களை இரண்டு தினத்துக்குள் விற்க வேண்டிய கட்டாயம், இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,  வாகன உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதையடுத்து ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், சுசுகி போன்ற நிறுவனங்கள் வானங்களை விற்க போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி வழங்கி வருகின்றன. குறிப்பாக, இன்று காலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதன் விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

இதையடுத்து இன்று மாலை முதல் பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒரு வாகனத்துக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில், வாகனங்களை விற்க நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வாகன உற்பத்தியாளர்கள் வாதிட்டனர். ஆனால், அதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கு முன் பி.எஸ். 3 விதிமுறைக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அமலுக்கு வந்தபோது அதற்கு முன் இருந்த வாகனத்தை விற்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)