வருமானவரிச் சட்ட மாறுதல்கள் !
வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம் கீழே...
*சட்டவிதி 269ST(a):*
ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (அ) பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (sale bill) அல்லது பல விற்பனைப் பட்டியல்களுக்காகவோ, ரூ.3,25,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(b):*
ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு வி்ற்பனைப் பட்டியலுக்காக, ஒரே நபரிடமிருந்து, பல தவணைகளாக, பல நாட்களில், ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒருவருக்கு ரூ.4,00,000/- க்கு ஒரே விற்பனைப் பட்டியலாகப் போட்டு, ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வீதம் பல தேதிகளில், ரூ.4,00,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(c):*
ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், பல பிரிவுகளில் பல்வேறு வகையிலான தொடர் விற்பனைப் பட்டியல்களுக்கு, ஒரே நபரிடமிருந்து, ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவோ, ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நபருக்கு, ரூ.1,50,000/- ற்கு சேலை/துணி விற்பனைப் பட்டியலாகவும், ரூ.1,30,000/-க்கு தறிக்கூலி பட்டியலாகவும், ரூ.1,20,000/- க்கு துணியில் கல் பதித்த கூலிப் பட்டியலாகவும் போட்டு, மொத்தமாகவோ அல்லது பல தவணைகளாகவோ ரூ.4,00,000/- ஐயும் ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
இது அனைத்து வணிகப் பிரிவுகளுக்கும் பொருந்தும்.
*மிகமுக்கியகுறிப்பு*:
மேற்படி விதியின்படி, கட்டவேண்டிய தண்டத்தொகை எவ்வளவு தெரியுமா…?
100% (நூறு சதவிகிதம்)
அதாவது, நீங்கள் ரொக்கமாகப் பெற்ற தொகை *முழுவதையும்* அப்படியே அரசுக்கு செலுத்திவிட வேண்டும்.