விபத்தில் இறந்த பெற்றோரை வீட்டில் வைத்து விட்டு தேர்வு எழுதிய மாணவி

விபத்தில் இறந்த பெற்றோரை வீட்டில் வைத்து விட்டு தேர்வு எழுதிய மாணவி - மேட்டூரில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் !!
விபத்தில் தனது பெற்றோர் இறந்ததையும் பொருட்படுத்தாமல் துக்கத்திற்கு இடையே பெற்றோரின் கனவை நி
றைவேற்றும் வகையில், +2 மாணவி ஒருவர் தேர்வெழுதிய சம்பவம் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் முருகேசன். இவர் தனது மனைவி சுமதியுடன் நேற்று இருசக்கர வாகனத்தில் தமது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். மேச்சேரி அருகே வந்து வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி முருகேசனின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சுமதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சுமதியும் உயிரிழந்தார். இந்நிலையில், அவர்களின் மூன்றாவது மகள் அமிர்தகௌரி மிகுந்த துக்கத்துக்கு இடையேயும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை கண்ணீருடன் எழுதினார். பின்னர், அவருடைய சக மாணவிகள் கண்ணீர் மல்க அமிர்தகௌரிக்கு ஆறுதல் கூறினர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)