பேஸ்புக்கில் புதிய அப்டேட்
பேஸ்புக்கில் புதிய அப்டேட்: வரப்போகிறது டிஸ்லைக் பட்டன் !!
பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் டிஸ்லைக் பட்டனை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பேஸ்புக்
நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள், செய்திகள், புகைப்படங்களுக்கு நமது உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் ரியாக்ஷன்
பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வசதியில் பேஸ்புக் சில புதிய ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
பேஸ்புக்கில் லைக் பட்டன்கள் மட்டுமே இதுவரை உள்ளது. இந்நிலையில் பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பில் டிஸ்லைக் பட்டனையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300 பில்லியன் பயனர்கள் ரியாக்ஷன் பட்டன்களை பயன்படுத்தியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நமக்கு பிடிக்காத பதிவுகளுக்கு இந்த டிஸ்லைக் பட்டனை பயன்படுத்தலாம். கட்டைவிரலை கீழே கவிழ்த்தது போல் உருவாக்கபட்டுள்ள இந்த புதிய எமோஜி சோதனை முடிந்து பேஸ்புக்கில் அப்டேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.