அண்ணாமலை பல்கலையில் கல்வி தகுதி குறைந்த பேராசிரியர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ்!


        சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பணிபுரிந்து வரும்  பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் அனை
வருக்கும் கல்வி தகுதி சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்திரவிட்டது.

         அதன் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளங்கலை படிக்காமல் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் நேரிடையாக முதுகலை பட்டபடிப்பு முடித்ததாக சான்றுபெற்ற 20க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிஏ.(மேலாண்மை துறை) மற்றும் தமிழ் துறை, சமூகவியல் துறை, நூலகத்துறை உள்பட பல துறைகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் கல்வி தகுதிப்பற்றியும், பல்கலைக்கழக மாணியக்குழு விதிகளுக்கு எதிராக பணி நியமனம் செய்யபட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தபட்ட பேராசிரியர்களிடம் உரிய விளக்க கடிதம் கேட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தில் நேரிடையாக திறந்த வெளி பல்கலைகழகம் மூலம் முதுநிலை பட்டபடிப்பு படித்து பல்கலைக்கழகத்தில் தற்போது பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் , உதவி பேராசிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் (எம்பிஏ) மேலாண்மை துறையில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதல் கிளாஸ் எடுக்காமல் 60 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண்கள் எடுத்து உதவி பேராசிரியர்களாக மாணியக்குழு விதிகளுக்கு எதிராக தற்போது பணியாற்றி வரும் 48 பேர்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
 தொலைதூர கல்வி மையம் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள படிப்பு மையம், பல்கலைக்கழக விடுதிகள் ஆகியவற்றில் முதுநிலை பட்டபடிப்பு படித்து எஸ்ஓ (சிறப்பு அதிகாரிகள் ) ஆக பணிபுரிந்து வரும் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசின் ஆணைபடி ரூ 15 ஆயிரம் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைகழகத்தை எம்ஏஎம் ராமசாமி நிர்வகித்து வந்தபோது பல்வேறு முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர்கள் ஊழியர்களின் கடும்போராட்டத்தின் காராணமாக 2013ம் ஆண்டு தமிழக அரசின் நிர்வாக கட்டுபாட்டுக்கு வந்தது. அதன் பிறகு அரசின் அதிரடியான சில நடவடிக்கையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்கலைகழக சிண்டிகேட் கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில் பணி நிரவல், சம்பளக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஊழியர்களுக்கு தொடர்ந்து மாதா மாதம் சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டத்தையொட்டி அரசின் வழிகாட்டலின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)