வாழ்க்கை வழிகாட்டுதல்: மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
வேலைவாய்ப்புத் துறை சார்பில், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி
முகாம் நடத்தப்படுகிறது
பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தங்கி பயில்வோருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த விடுதிகளில் தங்கி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வியில் சேருவது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைக்கின்றனர்.