டூவீலர், கார் சொந்தமாக இருக்கா? ஏப்ரல் முதல் 'ஷாக்' காத்திருக்கு

இரு சக்கர வாகனம், கார், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் ஆகியவற்றுக்கான (இன்சூரன்ஸ்)காப்பீடு கட்டணம் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 50 சதவீதம் உயர்த்த காப்பீடு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம்(ஐ.ஆர்.டி.ஏ.ஐ.) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயராது?
அதே சமயம், 1000 சி.சி. திறனுக்கு குறைவுள்ள சிறிய கார்களான மாருதிஅல்டோ, டாடா நானோ, டாட்சன் கோ ஆகிய கார்களுக்கான மூன்றாம் நபர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை எனத் தெரிகிறது. இப்போது இந்த வாகனங்களுக்கு ரூ.2,055 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
விபத்தைத் தடுக்க
நாட்டில் அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்கவும், குறைக்கவும் மூன்றாம் நபருக்கான(தேர்டு பார்ட்டி)இன்சூரன்ஸ் கட்டணம் கண்டிப்பாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் வாகனங்களுக்குமட்டும் காப்பீடு எடுத்து மூன்றாம் நபர்களுக்கான காப்பீடுகளை எடுப்பதில்லை. இதனால், விபத்துக்கள் ஏற்படும் போது, பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு தருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கவே மூன்றாம் நபருக்கான காப்பீடு உயர்த்தப்பட உள்ளது.
50 சதவீதம்
இதன்படி 1000 முதல் 1,500 சி.சி. திறன் கொண்ட நடுத்தர பிரிவு கார்கள், பெரிய ரக செடான் கார்கள், எஸ்.யு.வி.கார்களுக்கு காப்பீடு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
காப்பீடு கட்டணம் 1000 சி.சி வரை ரூ.3,355 ஆகவும், பெரிய வாகனங்களுக்கு ரூ.9,246 ஆகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
350சிசி பைக்
அதேசமயம், 75சி.சி. திறனுக்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிகிறது.
மேலும், 350சி.சி.க்கு அதிகமான திறன்கொண்ட ஸ்போர்ட்ஸ்பைக், சூப்பர் பைக்குகளுக்கு காப்பீடு கட்டணம் ரூ.796லிருந்து, ரூ.1,194 ஆக உயரும் எனத் தெரிகிறது.
இருசக்கர வாகனங்கள்
மேலும், 77 முதல் 150சிசி மற்றும் 150 முதல் 350 சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கும் காப்பீடு கட்டணம் உயர்த்தப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
டிராக்டர்
6 எச்.பி. திறன் வரை உள்ள டிராக்டர்களுக்கான இன்சூரன்ஸ் ப்ரியமியம் கட்டணம் 510ரூபாயில் இருந்து ரூ.765 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இ-ரிக்சாக்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது. பழமையான கார்களுக்கு காப்பீடு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட உள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)