இனி பிஎப் / இஎஸ்ஐ இரண்டும் ஒரே படிவத்தில்
தொழிலாளர்களின் நலன் கருதி, பிஎப் மற்றும் இஎஸ்ஐ என்ற இரு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது . இவை இரண்டிலும் இணைவதற்கு இதுவரை தனி தனி
படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது . இந்நிலையில், இவை இரண்டிற்கும் ஒரே படிவத்தின் மூலம் இணைவதற்கு அரசு மூயற்சி மேற்கொண்டு வருகிறது
பிஎப் திட்டம் / இஎஸ்ஐ திட்டம்
ஒரு நிறுவனத்தில், 20க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்தால் அவர்களை பிஎப் திட்டத்திலும், 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், இஎஸ்ஐ திட்டத்திலும் சேர வேண்டும் என்பது சட்டம்.
எத்தனை நிறுவனங்கள் பிஎப்/ இஎஸ்ஐ கொண்டுள்ளது ?
இந்நிலையில், இவை இரண்டையும் ஒரே படிவத்தின் மூலம் இணைவதற்கு அரசு மூயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இனி மற்ற சிறு நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு பிஎப் மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .