'சரியாக செயல்படாத கல்லூரிகளை மூட முடிவு' -மத்திய அரசு திட்டம்..!
சரியாகச் செயல்படாத, கல்லூரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லூரி, பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. யு.ஜி.சி என்று சொல்லப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்வா
கத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைகளின் தரத்தை ஆராயவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் பேசும்போது, "ஒவ்வொரு பல்கலை மற்றும் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல்கலைக்கழகங்கள் மூன்று தரங்களாக பிரிக்கப்படும். மிகச் சிறந்தவை, மேம்படுத்த வாய்ப்புள்ளவை, மிக மோசமானவை என மூன்று வகைகளாகத் தரம் பிரிக்கப்படும்.
மிகச் சிறந்த கல்லூரிகளுக்கு கூடுதல் வசதிகளும், மானியங்களும் வழங்கப்படும். மேம்படுத்த வாய்ப்புள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் முன்னேற என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ள முடியும் என்ற ஆலோசனை வழங்கப்படும். மிக மோசமானவை பிரிவில் உள்ள கல்லூரி, பல்கலைக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் இவற்றை மேம்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும்.
அதன்பிறகும் முன்னேற்றம் ஏற்படாமலிருந்தால் அவை மூடப்படும் அல்லது மற்றொரு கல்லூரியுடன் இணைக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.