உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய ஒரு புகைப்படம் போதும்: அதிர்ச்சி ரிப்போர்ட்
வாட்ஸ்அப் ஹேக் !!
உங்களது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம்களை ஹேக்கர்களால் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியுமாம். இது தொடர்பாக இஸ்ரேலைச் சேர்ந்த செக் பாய்ண்ட்
என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
புகழ்பெற்ற சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், மற்றும் டெலிகிராம் ஆகியவற்றை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அபாயம் உள்ளது. அதற்கு ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் வகையிலான புகைப்படங்களை அனுப்புவார்கள்.
செக் பாண்ட் தெரிவித்துள்ள தகவலின் படி நமது கண்ணை நம்ம முடியாத வகையில் கிளிக் செய்ய தூண்டும் வகையில் false thumbnail உள்ள புகைப்படங்களை ஹேக்கர்கள் வாட்ஸ் அப்பிற்கு அனுப்புவார்கள்.
அந்த புகைப்படம் HTML பைல்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் கிளிக் செய்தவுடன் உங்கள் இன்டர்னல் ஸ்டோரேஜில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஹேக்கர்கள் திருடிவிடுவார்கள். இவை அத்தனையும் உண்மையாகும்.
எனவே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் வீடியோ மெசேஜை பார்க்க விரும்பினார் ரைட் கிளிக் செய்து புதிய விண்டோவை ஓபன் செய்து பார்ப்பது நல்லது. இதன் மூலம் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.