ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டால் ஒன்பது ரூபாய் வரி !!


ஜி.எஸ்.டி., வரி ஹோட்டல் உரிமையாளர்களையும், கஸ்டமர்களையும் நசுக்கபோகிறது மோடி அரசாங்கம். இந்தியாவிலேயே உணவு விடுதிகளில் குறைவா
ன வரி வசூலிக்கப்படும் மாநிலம் கேரளா. அங்கு, உணவு சாப்பிடுபவர்களுக்கு வரி 0.5% மட்டுமே வசூலிக்கபட்டுவருகிறது. தமிழக ஹோட்டலில் 2% வரி

வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் 2% வரிதான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் 14% வரி வசூலிக்கப்படுகிறது. அதனால் ஜி.எஸ்.டி. வரியால் வடமாநில ஹோட்டல்களுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது.

ஆனால் ஜி.எஸ்.டி., வரியால் இனிமேல் ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் 18% வரி செலுத்தவேண்டும். அதாவது 50 ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டால் 9 ரூபாய் வரி செலுத்தவேண்டும். வடமாநிலங்களில் ஏற்கனவே 14% வரி செலுத்துபவர்களுக்கு 4% வரி உயர்த்துவதால் பெரிய பாதிப்புகள் தெரியாது. தற்போது, தமிழகம், கேரளா ஹோட்டல் உரிமையாளர்கள் வரியை குறைக்க போராடிவருகிறார்கள் என கடலூர் ஆடிட்டர் சிங்கரவேல் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)