தொடக்க கல்வித் துறையில் இன்று திடீர் கலந்தாய்வு


       தொடக்க கல்வித்துறையில் இன்று (மார்ச் 9) அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.


           அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2016 ஆகஸ்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பதவி உயர்வு, ஓய்வு போன்ற காரணங்களால் ஏற்படும் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அரசியல் சூழ்நிலையால் கலந்தாய்வு நடத்தவில்லை. கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்த தொடக்க கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது. அதில், '2016 ஆகஸ்ட் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின் ஏற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை வெளிப்படை கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். இதனால் ஏற்படும் காலியிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனை 2016 ஜன., 1 க்கான ஒன்றிய சீனியாரிட்டியை கடை பிடிக்க வேண்டும். ஏற்கனவே நீதிமன்றத்தால் தடையாணை பெற்ற பணியிடங்களை நிரப்பக்கூடாது. இந்த கலந்தாய்வில் ஆசிரியர்களை கண்டிப்பாக மாறுதல் செய்யக்கூடாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் 2017 ஜன., ல் சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசரகதியில் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank