சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச BSNL புதிய வசதி அறிமுகம்

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும் செயல்படும்

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.

தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டி சேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது. இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டா சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.

சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம். இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (வாய்ஸ் கால்) நன்கு தெளிவாக கேட்கும்.

இவ்வாறு கலாவதி கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)