CBSE, 10ம் வகுப்பு பொது தேர்வு முறையில் மாற்றம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவிலும், தேசிய அளவிலும், தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள், ஏதாவது ஒருமுறையில், ஆண்டு இறுதி தேர்வை எழுத வேண்டும்.
இதில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால், வரும் ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது. இந்நிலையில், இத்தேர்வு முறையில் உள்ள அகமதிப்பீடு முறையும் மாற்றப்படுவதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டுமின்றி, தொழிற்கல்வி பாடம் ஒன்றுக்கும் சேர்த்து, தேர்வு எழுத வேண்டும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியலில், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், மாணவர்களின் தொழிற்கல்வி மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இதற்கு விருப்பம் இல்லையேல், மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடத்தில், துணை தேர்வு எழுதி கொள்ளலாம் என, சி.பி.எஸ்.இ., தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.