வதந்திகளை நீக்காவிட்டால் ஃபேஸ்புக்கிற்கு ( Face book)அபராதம் புதிய சட்டம்
அன்றாடம் நமக்கு வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பல்வேறு அவதூறுச் செய்திகள், வதந்திகள், சாதிவெறி மதவெறி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதுவும் குறிப்பாய் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் மரணம் குறித்து மணிக்கொரு வதந்தி பரவி வந்தது. இது குறித்து ஃபேஸ்புக் அல்லது வாட்சப்-பில் புகாரளித்து அத்தகையப் பதிவுகள் நீக்கப்படுவதற்குள் அது காட்டுத்தீவாய் பரவி விடுகின்றது.
இதனைத் தடுக்க ஜெர்மனி அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
நீதித்துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் பதிவிடும் துவேசப்பதிவுகள், வதந்திகள், அவதூறு ஆகிய செய்திகள்மீது புகாரளிக்கப்பட்டாலும் ஃபேஸ்புக் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை , அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முனைப்பு காட்டவில்லை." என்றார்.
" கிரிமினல் உள்ளடக்கம் கொண்ட பதிவுகள் மிகவும் குறைந்த அளவிலேயே நீக்கப்படுகிறது, மேலும், அவற்றை நீக்க ஃபேஸ்புக் எடுத்துக்கொள்ளும் காலதாமதம் கவலையளிக்கின்றது" என்றும் ஹைக்கோ மாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர், "இதில் மிகப் பெரியப் பிரச்சனை என்னவென்றால், சமூகவலைத்தளங்கள் தங்கள் சொந்த உறுப்பினர்கள் அளிக்கும் புகார்களைக் கூட தீவிரமாக நடவடிக்கை எடுப்பதில்லை" என்றும் கூறினார்.
போலிச் செய்தி மற்றும் வெறுக்கத் தக்க பேச்சுகள்இந்த வருட இறுதியில் வரவுள்ள தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜெர்மனிய அரசியல் வட்டாரங்கள் தங்களின் கவலையைப் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்தச் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது கூறித்து பதில் அளிக்கப் பேஸ்புக் நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்தச் சட்டம் "குற்றவியல் உள்ளடக்கமுள்ள பதிவுகள்குறித்து புகாரளிக்க 1. எளிதில் புகாரளிக்க வகைசெய்யும் வசதி, எளிதில் அணுக்க் கூடியதாக மற்றும் எப்போதும் பின்பற்ற வேண்டிய செயல்முறை"ஆகியவற்றை சமூக வலைதளங்கள் பயனர்களுக்கு வழங்க உறுதி செய்யும்.
மேலும், சமூகவலைத்தளங்கள் , குற்றவியல் உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகள்மீது அளிக்கப்படும் அனைத்து புகார்களை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். ஒவ்வொரு புகாருக்கும், புகாரளிப்பவரிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால் € 5 மில்லியன் (₹ 35 கோடி வரை) வரை அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை ட்விட்டர் குற்றவியல் உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகள் குறித்த புகாரில்
வெறும் 1 சதவீதம்
மட்டுமே நீக்கியுள்ளது. பேஸ்புக் குற்றவியல் உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகள் குறித்த புகாரில் வெறும்
39 சதவீதம்
நீக்கியுள்ளது. யூடியூப் (YouTube) சிறப்பாகச் செயல்பட்டுள்ளது., புகாரளிக்கப் பட்ட வீடியோக்களில்
90 % பதிவுகளை
நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளைக்கு பில்லியன் கணக்கில் பதிவுகள் பறிமாறப்படும் போது, ஃபேஸ்புக் மற்றும் வாட்சப் நிறுவனங்களால் 24 மணி நேரத்திற்குள் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க முடியுமா எனும் கேள்விக்குறி எழுந்துள்ளது.