RAILWAY: NEW MOBILE APP
ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் செயலி மூலம் பயணம் தொடர்பான அனைத்து விஷயங்களையும தெரிந்து கொள்ளவும் மற்றும் சேவைகளையும் பெற முடியும். இதன் மூலம் டிக்கெட் முன் பதிவு ம்ட்டுமின்றி உணவு ஆர்டர் கொடுத்தல், டாக்சி வாடகைக்கு பிடித்தல், போர்ட்டர் அமர்த்துதல், போன்ற விஷயங்களை பயணிகள் பயணத்தின் போதே முடிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய மொபைல் செயலி வரும் மே மாதம் நடைமுறைக்கு வர உள்ளது.
பயணத்தின் போது வாடகை டாக்சி, இ கேட்டரிங் போன்றவற்றிற்கு ஏற்கனவே தனித்தனி மொபைல் செயலிகள் நடைமுறையில் இருந்தாலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மொபைல் செயலி பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பாபு நேற்று (மார்.2) வெளியிட்ட2017-18ம் ஆண்டுக்கான புதிய ரயில்வே சேவைத் திட்டங்கள் பற்றி கூறியதாவது: விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ள இந்த மொபைல் செயலி மூலம் பயணிகள் தங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ேஹாட்டல் ரூம் புக்கிங், டிராவல் பேக்கேஜ், சீசன் டிக்கெட், உணவு விடுதிகளில் ஆர்டர் செய்தல், போன்ற வசதிகளை இதன் மூலம் திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் பெற முடியும் என தெரிவித்தார்,