SBI ஊழியர்கள் இனி ‘வீட்டில் இருந்தே வேலை’ செய்யலாம்..!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தங்களது ஊழியர்களு
க்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகிகள் வாரியம் ஊழியர்கள் அவசரக் காலங்களில் வீட்டில் இருந்தபடியே மொபைல் சாதனங்கள் மூலம் மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டு பயண நேரத்தைக் குறைத்துக்கொண்டு வேலை செய்வதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில்நுட்பங்கள்
இதற்காக மொபைல் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி ஊழியர்கள் பாதுகாப்பாகத் தரவு திருடு போகாமல் வீட்டில் இருந்த படியே பணி புரிவதற்கான சாதனங்கள் மற்றும் செயலிகளை உருவாக்கும் பணியில் வங்கி ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலாண்மை தகவல் அமைப்பு
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் போது கவனமாகக் கையாளக்கூடிய மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை போன்றவற்றை மேம்பாடுகள் மற்றும் சீரமைப்புகளுடன் செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவையைப் பயன்படுத்திக் கண்காணிக்க இருக்கின்றது.
எந்த ஊழியர்கள் எல்லாம் வீட்டில் இருந்தே வேலை செய்ய முடியும்
வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையில் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, சமூக ஊடக மேலாண்மை, தீர்வு மற்றும் நல்லிணக்கம், புகார்கள் மேலாண்மை பயன்பாடுகள் போன்ற பணிகள் மட்டும் வழங்கப்படும் என்று இதனால் பணியாளர் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று எஸ்பிஐ கூறுகின்றது.
எஸ்பிஐ துணை வங்கிகள்
எஸ்பிஐ துணை வங்கிகள் இணையும் நிலையில் ஊழியர்களின் அதிகரிப்பால் இடப்பற்றாக்குறை ஏற்பாடும் நிலை உருவாகி உள்ளதால் இது போன்ற வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கும் முறையை எஸ்பிஐ அறிமுகப்படுத்துவதாகவும் மூத்த வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.