TET - 1,111 பணியிடங்கள் நியமனம் - குறைய வாய்ப்பு ! - அதிர்ச்சி தகவல்
TRBன்(dated on 7.3.2017) தற்போதைய அறிவிப்பின்படி,பள்ளிகல்வித்துறை பணியிடங்கள் (DSE) 286ம்,பின்னடைவுப் பணியிடங்கள் (BACKLOG
- 2012-2013) 623ம்,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் (RMSA) 202ம்,ஆக மொத்தம் 1111 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 286 + 202 = 488 பணியிடங்கள் எந்தெந்த பாடம் ? என்பன பல, யாரும்அறியாதது... (எனக்கும்..)ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்த TNTET -2012-2013 (Notificationand selectionlist) அறிவிப்பு பட்டியலிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களான 623 பின்தங்கியபணியிடங்கள் (Backlog vacancies) பாடவாரியாக மற்றும் இனவாரியாக எவையென என்னால்முடிந்தளவு சரியாக பட்டியலிட்டுள்ளேன்.
மேலும் இப்பின்தங்கிய பணியிடங்களில்சில இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிகிறேன், ஏனென்றால் இவை யாவும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் (இனசுழற்சி அடிப்படையில்) இல்லையென ஏற்கனவே நிரப்படாமல் "NOTAPPLICABLE" என்று அறிவிக்கப்பட்டவையாகும்.எனவேஇப்பொழுது அறிவிக்கப்படயிருக்கும் 1111 பணியிடங்களில் குறைந்தது 550 (623-Backlog-ல்) மேற்பட்ட பணியிடங்களுக்கு “தகுதி வாய்ந்தவர்கள் இல்லையென்பதால்”நிரப்பட வாய்ப்பு மிகக்குறைவு, இருப்பினும் மற்றவை (286+202=488) பணியிடவாய்ப்புகள் TRB புதிய அறிவிப்பைப் பொருத்துதான் தகுதிவாய்ந்தவர்களின் பணியிடவாய்ப்புகள் இருக்கும்.
எனவே வருகின்ற தகுதித் தேர்வில்தான் நான் வழங்கியுள்ள 623ல் - 550+க்கும்மேற்பட்ட "தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் தேர்ந்தெடுக்க" வாய்ப்புள்ளது.
எனவேதேர்வுக்கு தயாராகும் ஆசிரிய நண்பர்கள் விரைந்து தங்களுக்கான பணி வாய்ப்பைபயன்படுத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
* புவியியல் பாடப்பிரிவு 400ம்
* வரலாறு பாடப்பிரிவு 95ம்
* அறிவியலில்/தாவரவியல் பாடப்பிரிவு 33+16ம்
* மற்ற பாடங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட இடங்கள் பின்தங்கிய பணியிடங்களாகஉள்ளதை நீங்களே பட்டியலில் அறிந்து உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள் ஆரியர்களே..
இவையனைத்தும் உத்தேசமான தகவல்களே...
ஆசிரியப்பணியை அறப்பணியாக அரசுப்பள்ளியில் பணிபுரிய காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்...
ப. கண்ணன்
பட்டதாரி ஆசிரியர், திண்டுக்கல்லிலிருந்து...