TET, ஆலோசனை நிகழ்ச்சி : மதுரையில் மார்ச் 12 தினமலர் நடத்துகிறது


மதுரையில் தினமலர் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) ஆலோசனை முகாம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில், நாளை (மார்ச் 12) காலை 10:00 மணி முதல் மதியம் 1:
00 மணி வரை நடக்கிறது.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மற்றும் இளங்கலையுடன் பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்த இத்தேர்வு, வரும் ஏப். 29ல் தாள் 1ம், 30ல் தாள் 2ம் நடக்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. தற்போது விண்ணப்ப வினியோகம் நடக்கிறது.இத்தேர்வுக்கு தயாராகி வரும், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் நலன் கருதி, தினமலர் நடத்தும் இந்த ஆலோசனை முகாமில், தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எந்தெந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும் என்பது குறித்து, பாடங்கள் வாரியாக சிறப்பு வல்லுனர்கள் பல்வேறு ஆலோசனை வழங்குகின்றனர்.

முகாமில், 'பொது அறிவு' பாடம் குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் பேசுகிறார். 'தமிழ்' பாடம் தொடர்பாக மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில்குமார், 'ஆங்கிலம்' குறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் வெங்கடாசலம், 'குழந்தை மேம்பாடு' தொடர்பாக மதுரை டி.வி.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரகாஷ் ஆகியோர் பேசுகின்றனர். அனுமதி இலவசம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)