TET - விண்ணப்பம் வாங்கும் போதும், பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை!!

TET - விண்ணப்பம் வாங்கும் போதும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை!!
TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து
வேலூர் விடியல் பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.


குறிப்பு 1: விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- ஐ பணமாக செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு 2: தேர்வுக் கட்டணம் செலுத்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி செலுத்து சலானைப் பூர்த்தி செய்து இந்தியன் வங்கி/ இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி/ கனரா வங்கிக் கிளையில் ரூ.500/- ஐ ( SC/ST (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம். ரூ 250/- ) செலுத்திட வேண்டும்.

குறிப்பு 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வங்கியில் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான செலுத்து சலானின் ஒரு பிரதியை கண்டிப்பாக இணைக்கவேண்டும்.

குறிப்பு 4: விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனைப் பேனாவினைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 5: விண்ணப்பத்தை மடிக்கக் கூடாது.


குறிப்பு 6: புகைப்படத்தின் மீது Attestation செய்யக் கூடாது.

குறிப்பு 7: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக TRB க்கு அனுப்பக் கூடாது. அந்தந்த கல்வி மாவட்ட DEO அலுவலகங்களில் கொடுத்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 8: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தரப்படவில்லை.

குறிப்பு 9: ஒரு மாவட்டத்தில் வாங்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின்பு வேறு மாவட்டத்திலும் திருப்பித் தரலாம்.

குறிப்பு 10: தாள் I மற்றும் தாள் II ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புபவர்கள் இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு 11: தேர்வு மாவட்டக் குறியீடுகள்


குறிப்பு 12: பாடக் குறியீடுகள்

தமிழ். : 100
ஆங்கிலம். : 104
கணிதம். : 300
இயற்பியல். : 400
வேதியியல். : 500
தாவரவியல். : 600
விலங்கியல். : 700
வரலாறு. : 800

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)