TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 5 நாளில் 3 லட்சம் விற்பனை.


TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வுகள்  ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 5 நாட்களில் 3 லட்சம் பேர் வி
ண்ணப்பம் பெற்றுள்ளனர்.


 தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப். 29, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது.

 முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

 இத்தேர்வை சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6ம்தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. அனைத்து மையங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.

மேலும் 10 நாட்கள் தொடர்ந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பால் பாயிண்ட் பேனாவால் விண்ணப்பம் நிரப்ப வேண்டும்: விண்ணப்பம் 'ஓஎம்ஆர்' வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பத்தில் கேட்ட விவரங்களை கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022