TNTET -2017 : அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது நிச்சயம்!


’மதுரையில் நடந்த தினமலர் டி.இ.டி., ஆலோசனை முகாமில் வல்லுனர்கள் தெரிவித்த அரிய ஆலோசனைகளால், அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ள
து’ என நிகழ்ச்சியில் பங்கேற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி குறித்து அவர்கள் கூறியதாவது:

ரேணுகா, கள்ளிக்குடி:
டி.இ.டி., தாள் 1 தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் 2012, 2013ல் நடந்த தேர்வுகளில் பங்கேற்று, 74 மற்றும் 81 மதிப்பெண் பெற்றேன்.இம்முகாமில் பங்கேற்ற பின் தான், ’எவ்வாறு ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்’ என தெரிந்தது. பாடங்கள் வாரியாக என்ன வகை வினாக்கள் இடம் பெறும், படித்த விஷயங்களை எளிதாக எவ்வாறு மனதில் நிறுத்தி வைக்கலாம் என்ற உளவியல் ரீதியான ஆலோசனைகளும் கிடைத்தது.குறிப்பாக ஆறு முதல் பிளஸ் 2 வரை புத்தகங்களில் பாடங்களை வரிசைப்படுத்தி படிக்க வேண்டும் என்பது பயனுள்ள தகவல். தினமலர் நாளிதழுக்கு நன்றி.

கந்த அஞ்சுகம், அண்ணாநகர்:
தாள்- 2 தேர்வு எழுதவுள்ளேன். ஏற்கனவே நடந்த தேர்வில் 99 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனாலும், அதிகம் மதிப்பெண் பெற முயற்சிக்கிறேன். அதற்காக, தினமலர் நடத்திய இம்முகாம் பயனுள்ளதாக இருந்தது.2012, 2013ம் ஆண்டு எழுதிய தேர்வில் என்ன தவறுகள் செய்தோம் என தெரிந்தது. குறிப்பாக பொது அறிவு, உளவியல் பாடங்களை எவ்வாறு முறைப்படுத்தி படிக்க வேண்டும் என்ற ஆலோசனை பயனுள்ள தகவல்.மேலும், படித்த விஷயத்தை எவ்வாறு மனதில் நிறுத்த வேண்டும் என்றும் ஒப்பீடு செய்து படிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும். அதிக மதிப்பெண் பெறுவேன்.

அம்சப்பிரியா, டி.வி.எஸ்., நகர்:
கணிதம் இளங்கலை முடித்து, பி.எட்., இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். முதன்முறையாக இத்தேர்வு எழுத உள்ளேன். தேர்வை எவ்வாறு எழுத வேண்டும், எந்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என ஒரு திசையும் தெரியாமல் தான் இம்முகாமில் பங்கேற்றேன்.வழக்கமாக, தமிழ் பாடம் எனக்கு சவாலாக இருக்கும். அப்பாடத்தை எவ்வாறு எளிதில் படிக்கலாம் என புரியும் வகையில் நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது. அதேபோல் உளவியல் மற்றும் பொது அறிவு பகுதியை எவ்வாறுபகுத்து, பிரித்து படிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் அளப்பறியது. தேர்வு பயம் நீங்கியது.

புவனேஷ்வரி, ஜெய்ஹிந்த்புரம்:
இதுவரை பல போட்டித் தேர்வுகள் எழுதியுள்ளேன். ஆனால், அதற்கெல்லாம் பாடங்களை மொத்தம் மொத்தமாக படித்தேன். ஆனால், பாடங்களை எவ்வாறு திட்டமிட்டு படித்தால் எளிதில் தேர்வு எழுதலாம் என்பது தெரிந்தது.இதன் மூலம் இதற்கு முன் எழுதிய போட்டித் தேர்வுகளில்என்ன தவறுகள் செய்தேன் என்பதை உணர்ந்தேன். அவற்றை இனிமேல் திருத்திக்கொள்ள இந்த முகாம் வாய்ப்பாக அமைந்தது. பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு தனியார் நிறுவனங்களில் ’கோச்சிங் கிளாஸ்’ சென்றாலும், இதுபோன்ற ஆலோசனைகள் கிடைத்திருக்காது.

மகேஸ்வரி, விளாங்குடி: தாள்- 1 தேர்வுக்காக தயாராகி வருகிறேன். 2012, 2013ல் இத்தேர்வு எழுதி 82 மதிப்பெண் பெற்று தகுதி பெற்றேன். ஆனாலும், அதிக மதிப்பெண் பெற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்பதற்காக இந்தாண்டும் இத்தேர்வுக்கு தயாராகிறேன்.எப்படி படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். படித்ததை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தன. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank