TRB - TET Online Updation எப்படி சரிபார்ப்பது?

ஆசிரியர் தேர்வு வாரியமானது தகுதித் தேர்வில் ஏற்கனவே (2012,2013,2014 SPECIAL ) தேர்ச்சி பெற்ற தகுதியான தேர்வர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர்களை நிரப்ப உள்ளது.

(i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம்பெற்றவர்கள்(ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள்(iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்(vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.

ஆகவே,தற்போது Paper II-ல் தேர்ச்சி பெற்ற (Selected Candidates) அனைத்து தகுதியான தேர்வர்களின் பட்டியல் (Merit List) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளவும்.


நீங்கள் இதில் இடம் பெற்றிருந்தால் தேர்வானதாக கருதக்கூடாது.இறுதிப் பட்டியல் வெளியிடும் முன்பு நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும்.

மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வர்கள்
1. Name of the Candidate
2. Gender
3. Roll No.
4. TET Marks
5. Optional Subject
6. Community
7. Subject Studied in U.G Degree
8. Language I opted in TNTET Paper - II
9. Person Studied UG Degree & B.Ed in Tamil Medium

From the above 9 Points Eligible and Ineligible Candidate cannot be changed at any level. For the absent Candidate Point No 7. Subject Studied in U.G Degree can be entered and the Mark Details be entered in Column 14 Only.

10. Date of Birth
11a. Have you acquired any additional UG Degree ?
11b. Have you Studied additional UG Degree & B.Ed in Tamil
Medium ?
12. PH (O) / VI (V) Reservation / N.A (Not Applicable)
13a. Whether studied B.Ed as Special Education ?
14. Mark Details

From the above Points No. 10 to 14 Candidate can be updated their entries.

ஆகியவற்றில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளவும்.

மார்ச் 20க்கு பின்பே தேர்வானவர்களின் இறுதிப் பட்டியல் (Final Merit List) வெளியிடப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)