கணினி ஆசிரியர்கள் மாநில அளவிளான மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப்போராட்டம் 07/05/2017.


    அரசுப் பள்ளிகளில் காணாமல் போன கணினி_அறிவியல் கல்வியை மீட்டெடுக்க வாரீர்....


கணினிக்கல்வியை அரசுபள்ளியில்
1-12 ஆம்  வகுப்புவரை ஆறாவது பாடமாக இந்த கல்வியாண்டிலேயே தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டி.

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் நடத்தும்...
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் ,

நாள் : 07-05-2017 (SUNDAY)
இடம் : சேப்பாக்கம் (சென்னை).

கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் படித்து வேலையில்லாமல் வாடும் ஆசிரியர்கள் போராட்டத்தில் தவறாமல் கலந்து வேண்டுகிறோம்.
ஒன்றுபடுவோம்!!
போராடுவோம்!!
வேலைபெறுவோம்!!

" முடங்கிக்கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்..!! எழுந்து வா போராடுவோம்..!!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?? என்ற கூற்றிற்கு இணங்க அனைவரும் பாடுபடுவோம்!! கணினி அறிவியல் பாடத்தை இனிவரும் காலங்களிலாவது அரசுப் பள்ளிகளில் அழிந்துவிடாமல் காப்போம்!!!

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,9789180422 ,9894372125. தமிழ்நாடு பி.எட்  கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank