ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்... அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்


 ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது. இந்த நிதியாண்டில் பல மாற்றங்களை பிரத
மர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.

 பட்ஜெட்டை முன்கூட்டியே அதாவது பிப்ரவரி 1-ந்தேதியே தாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. சலுகைகள் முதல் புதிய வரிகள் வரை, வரி குறைப்பு அனைத்தும் அமலாகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது.
 இதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, வருமான வரி விலக்கு என பல மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.  அவை என்ன என்பது தெரிந்துகொள்ளலாம்.
 வருமானவரி குறைப்பு
2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் வருமானவரி செலுத்து அளவு குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதாவது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரைஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள், 10 சதவீதம் வருமானவரி வரி செலுத்தி வந்தனர். அதை 5 சதவீதமாக பட்ஜெட்டில் குறைத்து நிதிஅமைச்சர் ஜெட்லி அறிவித்தார்.அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.அதாவது இந்த நிதியாண்டு முதல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5. லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் மட்டுமே வருமானவரி செலுத்தினால் போதுமானது.
அதிலும், வீட்டுவாடகை, குழந்தைகளின்படிப்பு,மருத்துவச்செலவு என 80 சி படிவத்தில் கணக்குகாட்டினால், அதையும் செலுத்த தேவையில்லை.
 2. ரூ.3.5 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ.2575 வரி செலுத்தினால் போதுமானது, இதற்கு முன்பு இது ரூ.5,150 ஆகஇருந்தது. மேலும், வரிசெலுத்தியதை திரும்பப் பெறும் டேக்ஸ் ரிபேட் அளவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 10 சதவீதம் கூடுதல்வரி
3. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் வருமானவரியோடு சேர்த்து, கூடுதல் வரியாக 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது நடைமுறைக்கு வருகிறது.
15சதவீதம் வரி
4. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல்வருமானம் இருப்பவர்களுக்கு ஏற்கனவே செலுத்தும் வருமானவரியோடு சேர்த்து கூடுதல் வரியாக 15 சதவீதம் செலுத்துவதும் நடைமுறைக்கு வருகிறது.
 ஒருபக்க வருமானவரி ரிட்டன் படிவம்
5. ஆண்டுக்கு ரூ. 5லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், முதல்முறையாக வருமானவரி செலுத்துபவர்களுக்காக ஒரு பக்கம் கொண்ட வருமானவரி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக வருமானவரி செலுத்தும் நபர்களிடம் அதிகமான விசாரணைகளும் நடத்தப்படாது. ஐ.டி.ஆர்.1 என்ற ஒருபக்க படிவம் மட்டுமே வர உள்ளது.
 அபராதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம்
6. 2017-18ம் நிதியாண்டில் வருமானவரி ரிட்டன்களை 2018,டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பாக செலுத்தினால் ரூ.5ஆயிரம் அபராதமும், அதற்கு பிறகு செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதேசமயம், ரூ.5 லட்சம் வரைஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
 வரிவிலக்கு
7. ராஜீவ்காந்தி சேமிப்பு திட்டத்தில் இதற்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு 80சிசிஜி படிவத்தின் படி வரிபிடித்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிதியாண்டு முதல் அந்த வரிபிடித்தம்செய்யப்படாது.
வரிபிடித்தம் இல்லை
8. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்பது இருப்பவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து பாதி அளவு பணத்தை இடையே எடுத்தால், வரிபிடித்தம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், அது மாற்றப்பட்டு பாதிபணம் வரை எடுத்தாலும் வரிவிதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ரூ.2லட்சத்துக்கு மேல் தடை
9.ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்கு மேல் யாருக்கும் பரிமாற்றம் செய்ய முடியாது. வர்த்தகர்கள் வங்கியில் இருந்து ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாகவும் எடுக்க முடியாது. அவ்வாறு ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம்செய்தால், எந்தஅளவு பரிமாற்றம் செய்கிறார்களோ அதே அளவு அபராதம் விதிக்கப்படும்.
 மருந்துகள் விலை உயர்வு
10. சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை, புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான 875 அத்தியாவசிய மருந்துகளின் விலை 2சதவீதம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்கிறது.
 இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு
11. ஏப்ரல் 1-ந்தேதி முதல் காப்பீடு பிரிமியம், வாகனங்களுக்கான மூன்றாம்நபர் காப்பீடு பிரிமியம் ஆகியவை 5 சதவீதம்  உயர்த்தப்படுகிறது. அதிலும் 150சிசி முதல் 350 சிசி வரை, அதற்க மேல் உள்ள சிசி உள்ள பைக்குகளுக்கு மூன்றாம்நபர் (தேர்டுபார்ட்டி இன்சூரன்ஸ்)காப்பீடு 40 சதவீதம் உயர்கிறது. கார்களில் 1000 சிசிக்கு மேல் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.
 எஸ்.பி.ஐ. வங்கி அபராதம்
12. எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக நகரங்களில் வசிப்போர் ரூ.5ஆயிரம், சிறுநகரங்களில்வசிப்போர் ரூ.3 ஆயிரம், கிராமங்களில் வசிப்போரு ரூ.ஆயிரம் வைத்துஇருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.100முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், மாதத்துக்கு 3 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் செய்தால், ரூ. 50 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.
 ஆதார் கட்டாயம்
13. ஜூலை 1-ந்தேதி முதல் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank