ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 கட்டணம் செலுத்த ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு !!
ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். ஜியோவில் ரூ.99 செலுத்தி உறுப்பினர் அவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும், அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டுடன் இதன் இலவச ஆஃபர் முடிவதாக இருந்தது. இதையடுத்து மார்ச் 31-ம் தேதி வரை (இன்று) இதன் இலவச ஆஃபர் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இலவச ஆஃபர் முடிந்த பிறகு, ரூ. 99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் ஆஃபர்களை
பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறி இருந்தது._
🔵 _இதனையடுத்து, ஜியோ இலவச ஆஃபர் இன்றுடன் முடியும் நிலையில், ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராவதற்கும் இன்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வருகின்ற 15-ம் தேதி வரை ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும், ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) + ரூ.303 செலுத்தினால் (15-ம் தேதிக்குள்) அடுத்து மூன்று மாதத்துக்கு ஜியோ முற்றிலும் இலவசம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது._
🔵 _மேலும், தற்போது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள், ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.